ADDED : ஆக 05, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த சோழதரம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் தலைமை தாங்கினார். தாசில்தார் இளஞ்சூரியன், பி.டி.ஓ., செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் அய்யப்பன் வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் ஆண்டாள் ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 1630 மனுக்கள் பெறப்பட்டது.