/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமாரக்குடி ஊராட்சியில் சிறப்பு முகாம்
/
குமாரக்குடி ஊராட்சியில் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 19, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் தலைமை தாங்கினார். தாசில்தார் இளஞ்சூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் செல்வி ஆனந்தன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
தி.மு.க., நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வாசு ராஜேந்திரன், செல்வக்குமார், பத்மநாபன், ராஜா, அருள்ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமில் 1,213 மனுக்கள் பெறப்பட்டது.