/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கற்றல் குறைபாடு மாணவர்கள் கண்டறியும் சிறப்பு முகாம்
/
கற்றல் குறைபாடு மாணவர்கள் கண்டறியும் சிறப்பு முகாம்
கற்றல் குறைபாடு மாணவர்கள் கண்டறியும் சிறப்பு முகாம்
கற்றல் குறைபாடு மாணவர்கள் கண்டறியும் சிறப்பு முகாம்
ADDED : செப் 16, 2025 11:49 PM

சிதம்பரம்; சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
வீனஸ் கல்விக் குழும தாளாளர் குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் ரோட்டரி கிளப் இன்னர் வீல் சங்க தலைவர் பத்மினி, குமராட்சி வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, கோமதி, ராமதாஸ் ஆகியோர் குத்துவிளக் கேற்றி துவங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் குழந்தை நல மருத்துவர்கள் சிவப்பிரகாசம், ராமநாதன் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிதல் மற்றும் அதனை எவ்வாறு சரி செய்தல் குறித்து பயிற்சி அளித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.
தொடர்ந்து, பயிற்சி வகுப்பில், பங்கேற்ற ஆசிரியர்கள் 4 குழுக்களாக பரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்பட்டது.