ADDED : நவ 24, 2025 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி உதவி மையம் நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்தது. வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று கடலுார் கே.என்.சி., பெண்கள் கலைக்கல்லுாரி, ஏ.ஆர்.எல்.எம்.மெட்ரிக் பள்ளி, அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி உட்பட 18 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது.
அந்தந்த பகுதி வாக்காளர்கள் தங்கள் விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை கொடுத்து சந்தேகத்தை தீர்த்துக்கொண்டனர்.

