/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
/
சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED : அக் 13, 2024 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 4ம் சனிக்கிழமை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.
நேற்று 4ம் சனிக்கிழமை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வரும் 17 ம் தேதி வியாழக்கிழமை திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெறுவது போல் ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது.