தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நுால்   

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நுால்   

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நுால்   


ADDED : ஆக 13, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி, ஆக. 14–அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை வழிபாட்டுக் கூட்டங்களுக்கு வழிகாட்டும் சிறப்பு நூல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ‘இணையவழிக் கல்வி வானொலி ஆசிரியர் குழு’ கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு தன்னார்வக் கல்விச் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. புவனகிரியைச் சேர்ந்த நல்லாசிரியர் கார்த்திக்ராஜா, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கிய இம்முயற்சியானது தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்களின் பங்களிப்புடன் தன்னார்வக் கூட்டு முயற்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இக்குழுவின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக ஆண்டு தோறும் ஆண்டு மலர் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட 2026ம் ஆண்டிற்கான ஆண்டு மலரில் பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு தொகுப்பு  இணைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில், 210 பள்ளி வேலை நாட்களுக்கு தேவையான திருக்குறள், பழமொழிகள், விடுகதைகள், அறிஞர்களின் சிந்தனைத் துளிகள், சொல் விரிவாக்க பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார் அம்சங்கள் மற்றும் மாணவர்களின் மொழித்திறன், சிந்தனைத்திறன், வாசிப்பு பழக்கம் மற்றும் பொது அறிவை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நுால் தொகுப்பின் மூலம், பள்ளியில்  காலை வழிபாட்டுக் கூட்டங்களை திட்டமிட்ட முறையில் நடத்த ஆசிரியர்களுக்கு எளிதான வழிகாட்டி நூலாக பயன்படுகிறது.

இந்நுால்களை தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளுக்கு காமராஜர் அறக்கட்டளை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. புவனகிரியில் நடந்த தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலர் கலைசெல்வி இந்நுாலை வெளியிட, வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். நல்லாசிரியர் கார்த்திக்ராஜா ஏற்புரையாற்றினார்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் இந்நுால் இலவசமாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us