/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறப்பு தீவிர திருத்தப் பணி: கலெக்டர் ஆய்வு
/
சிறப்பு தீவிர திருத்தப் பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 16, 2025 03:54 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்கும் வகையில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜண்டுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் குறித்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிகள், நகர மற்றும் ஊரக பகுதிகளில் வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் வினியோகம் குறித்து விசாரணை செய்தார்.
மேலும், வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதிலளித்து, முறையாக படிவங்களை பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா, தாசில்தார் அரவிந்தன் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

