/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
/
வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 23, 2024 11:17 PM

வேப்பூர்; வேப்பூர் அடுத்த பூலாம்பாடியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, பூலாம்பாடி ஊராட்சி தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
அரசு மருத்துவர்கள் விமலா, மாலதி, ரேஷ்மா, எழில் செல்வம், சிங்கத்தமிழன் முன்னிலை வகித்தனர்.
நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி முகாமை துவக்கி வைத்தார்.
தி.மு.க., கிளை செயலர்கள் காமராஜ், வேல்முருகன், ஊராட்சி செயலர் பானுபிரியா பங்கேற்றனர்.
இதில், கிராம மக்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை நடந்தது. டெங்கு கொசு தடுப்பு விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பின், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.