/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
/
சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
ADDED : டிச 06, 2024 06:44 AM

கடலுார் : கடலுார் மற்றும் பண்ருட்டியில் வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
கடலுார் மற்றும் பண்ருட்டியில் பெஞ்சல் புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலரான, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சி்ங் பேடி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பின்னர், அழகியநத்தம் கிராமத்தில், வெள்ளத்தால் சேதமடைந்த நெல் வயல்களை பார்வையிட்டு சேத விபரங்களை கேட்டறிந்தார்.
பின், அவர் கூறியதாவது:
கடலுார் மற்றும் பண்ருட்டி பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மழை மற்றும் வெள்ளத்தால் மாவட்டத்தில் 83 கி.மீ., நீளத்திற்க சாலைகள் சேதமடைந்துள்ளன. அதில், 68 கி.மீ., துார சாலை சீமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை மூலம் 28 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
பெண்ணையாறு மற்றும் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல இடங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. 26 சிறு பாலங்கள் மற்றும் 3 தரைப்பாலங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவக்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சு உடனிருந்தனர்.