/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை
/
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை
ADDED : ஏப் 29, 2025 11:35 PM

கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர். அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், அலுவலகத்திற்குள் வந்து செல்ல உதவியாளர் ஒருவரையோஅல்லது அங்கிருப்பவர்களிடமோ உதவி கேட்க வேண்டிய நிலை உள்ளது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், எளிதாக அலுவலகத்திற்குள் வந்து செல்ல பிரத்யேக சிறப்பு பாதை, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.தொட்டுணரக்கூடிய நடைபாதை என்றழைக்கப்படும், சிறப்பு பாதை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மும்பை மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில், ஜப்பானில்உள்ளதைப் போன்ற எச்சரிக்கை மற்றும் திசைத் தடுப்புகள், மெட்ரோ நிலையங்களுக்குச் உள்ளே மற்றும் வெளியே செல்லும் நடைபாதைகளில் நிறுவப்பட்டுள்ளன. டில்லி மெட்ரோ நுழைவு வாயிலில் இருந்து வெளியேறும் வரை தொட்டுணரக்கூடிய நடைபாதைகள் உள்ளது. டில்லி நேரு பல்கலைக்கழகமும் அதன் நடைபாதைகளில் தொட்டுணரக்கூடிய நடைபாதைகளைக் கொண்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தில் ,'டெல்லி மெட்ரோவின் பாதைகளைப் போலவே, நுழைவு முதல் வெளியேறும் வரை தொட்டுணரக்கூடிய நடைபாதையும் இருக்கும்.தற்போது அதன் பயன்பாடு கடலுார் மாநகரத்திலும் நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, தொட்டுணரக்கூடிய நடைபாதை என்பது,பார்வையற்றோர் அல்லது பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் கால்களால் உணரக்கூடிய, வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நடைபாதை ஆகும்.
பார்வையற்றோருக்கு திசையைஅல்லது பாதையை அடையாளம் காணவும், தரை மேற்பரப்பில் ஏற்படும் அபாயங்களை உணரவும் இது உதவுகிறது.நடைபாதையின் விளிம்பில் அல்லது அபாயகரமான பகுதிகளில் எச்சரிக்கை வழங்கக்கூடியதாக உள்ளது.
தரைமேற்பரப்பில் கோடுகள் அல்லது முனைகள் போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டு, பார்வையற்றோர் புரிந்து பயன்படுத்தக்கூடியவடிவில் அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

