/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தனிப்பிரிவு போலீசாருக்கு கடிவாளம்:அதிகாரிகள் மீதான புகார் மீது நடவடிக்கை இருக்குமா?
/
'தனிப்பிரிவு போலீசாருக்கு கடிவாளம்:அதிகாரிகள் மீதான புகார் மீது நடவடிக்கை இருக்குமா?
'தனிப்பிரிவு போலீசாருக்கு கடிவாளம்:அதிகாரிகள் மீதான புகார் மீது நடவடிக்கை இருக்குமா?
'தனிப்பிரிவு போலீசாருக்கு கடிவாளம்:அதிகாரிகள் மீதான புகார் மீது நடவடிக்கை இருக்குமா?
ADDED : டிச 31, 2025 03:04 AM
க டலுார் மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி என, 7 உட்கோட்டங்களும், 40க்கும் மேற்பட்ட போலீஸ்நிலையங்களும் உள்ளன. ஒவ்வொரு சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்திலும், நடப்பவைகளை எஸ்.பி.,யின் தனிப்பிரிவுக்கு தெரிவிப்பதற்காக தனிப்பிரிவு போலீஸ் ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
சில தனிப்பிரிவு போலீஸ்காரர்கள், ஸ்டேஷன்களில் நடக்கும் விஷயங்களில் தலையிட்டு, தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. மேலும் சிதம்பரம், கடலுார் புதுநகர், முதுநகர் உட்பட சில ஸ்டேஷன்களின் தனிப்பிரிவு போலீசாரும் அண்மையில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, தனிப்பிரிவு போலீஸ் ஒருவர், டி.எஸ்.பி.,யின் விசாரணையில் தலையிட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த டி.எஸ்.பி., மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தனிப்பிரிவு போலீஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார், அதிகாரிகளின் விசாரணையில் தலையிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிகாரிகளிடமும், தனிப்பிரிவு போலீசாருக்கு பயப்படாமல் விசாரணையை நேர்மையாக நடத்துங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என தெம்பூட்டியுள்ளார். இதனால் போலீஸ் அதிகாரிகள் பலர் குஷியில் உள்ளனர்.
இந்த நடவடிக்கை, பெட்டிஷன் விசாரணையில் தலையிட்டு சம்பாதிக்கும் தனிப்பிரிவு போலீசாருக்கு கடிவாளம் போட்டுள்ளது. ஆனால், தவறு செய்யும் அதிகாரிகளைப்பற்றி, நேர்மையாக செயல்படும் தனிப்பிரிவு போலீசார் கொடுக்கும் தகவலுக்கு ரெஸ்பான்ஸ் இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது என தனிப்பிரிவு போலீசார் புலம்புகின்றனர்.

