/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சர்களுக்கு எதிராக நம்ம வேட்பாளர் தான்: தலைமை முடிவால் அ.தி.மு.க.,வினர் 'குஷி '

ADDED : டிச 31, 2025 03:03 AM
த மிழகத்தில், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்துக்கட்சிகளுமே தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகின்றன.
ஆளும் கட்சியான தி.மு.க., தனது ஆட்சி சிறப்பானது என்றும், அ.தி.மு.க.,வில் கட்சி தனது கட்டுப்பாட்டில் தான் சிறப்பாக உள்ளது என பழனிசாமியும், நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க., மக்களின் ஆதரவை எந்த அளவுக்கு பெறுகிறது என்றும் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதேபோல் காங்., பா.ம.க., தே.மு.தி.க., வி.சி., உட்பட அனைத்துக்கட்சிகளுமே தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் தேர்தலாக உள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க., தரப்பில் வர உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் அமைச்சர்களுக்கு எதிராக அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்துவது என்றும், கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது என்றும் தலைமை முடிவெடுத்துள்ளதாக கட்சியினர் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
இதனால், கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி தொகுதி அ.தி.மு.க.,வினர் 'குஷி'யாக உள்ளனர். கடந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதால் தொகுதியை இழந்த நிலையில், இம்முறை நிச்சயமாக வெற்றிபெறுவோம் என நம்பிக்கையுடன் உள்ளனர்.