/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
/
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED : டிச 26, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஏசு பிறந்த டிச.25ம் தேதியை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு கடலுார் மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கடலுார், கம்மியம்பேட்டை புதின சூசையப்பர் ஆலயத்தில் அருட்தந்தை சகாயராஜ் தலைமையில் ஏசு பிறப்பை கொண்டாடும் பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதே போன்று, கடலுார் கார்மேல் அன்னை ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

