/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் சிறப்பு திட்ட முகாம்
/
பெண்ணாடத்தில் சிறப்பு திட்ட முகாம்
ADDED : அக் 18, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, தாசில்தார் உதயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் முத்து, துணை சேர்மன் குமரவேல் முன்னிலை வகித்தனர். முதுநிலை எழுத்தர் ரமேஷ் வரவேற்றார்.
சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு முகாமை துவக்கி வைத்தார்.
இதில், 9 முதல் 15 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டுள்ளன.
அதில், மகளிர் உரிமைத் தொகை பெற வரும் பெண்களுக்கு சிறப்பு பகுதி அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.