ADDED : செப் 06, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில்களில் முதலாம் ஆண்டு சம்பஸ்ரா பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி நேற்று காலை யாக வேள்விகள் நடந்தது.
தொடர்ந்து, விநாயகர், காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் உள்ளிட்ட அனைத்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
மதியம் மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் முக்கிய வீதியாக வந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.