ADDED : செப் 08, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர்களுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவா மிகள், எருக்கம்பால் சித்தர் ஆகிய சுவாமிகளுக்கு பவுர்ணமியொட்டி நேற்று மதியம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து அமுது படைத்தல் நடந்தது. பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேப் போன்று, சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தை சுவாமி சித்தருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.