தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

 செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

 செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்


ADDED : ஜூன் 18, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: தென்னக ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை எழும்பூரில் (ரயில் எண்-06183) இருந்து செங்கோட்டைக்கு கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வழியாக நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு 10.22 மணிக்கும், சிதம்பரத்திற்கு இரவு 11:00 மணிக்கும் வந்து, திருவாரூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு மறுநாள் காலை 9 :15 மணிக்கு செல்கிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 21, 27, 28 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் (06184) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு சிதம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 3:26 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூருக்கு 4:06 மணிக்கும் வந்து தாம்பரத்திற்கு காலை 8:30 மணிக்கு சென்றடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us