ADDED : பிப் 03, 2026 03:14 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் குமரவேல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சமர்த்திறன் மேம்பாட்டு நெசவு பயிற்சி துவக்க விழா நடந்தது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நெசவாளர் சேவை மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி துவக்க விழாவிற்கு கைத்தறி துறை உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார். நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் வரதராஜ், கைத்தறி ஆய்வாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் மோகன் வரவேற்றார். நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கைத்தறி நெசவாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
விழாவில் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர் சங்க மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
