ADDED : பிப் 03, 2026 03:12 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை மருத்துவ அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். தொழுநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.
பின், அனைவரும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சதீஷ் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
