ADDED : பிப் 03, 2026 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா,40; இவரது மனைவி சரஸ்வதி, 31. இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சரஸ்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் காணவில்லை.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

