ADDED : ஜன 02, 2026 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் வரும் 3 மற்றும் 4ம் தேதி நடக்கும் வாக்காளர்கள் சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடந்து வருகின்றது. மந்தாரக்குப்பம் பகுதியில் வரும் 3 மற்றும் 4ம் தேதியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, நீக்க, போட்டோ மாற்றம், உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.
புதிய வாக்காளர்கள் 13 வகையான ஆவனங்களின் ஒன்றின் நகலினை ஆதாரமாக வைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

