/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் வார்டு சிறப்பு கூட்டம்
/
பரங்கிப்பேட்டையில் வார்டு சிறப்பு கூட்டம்
ADDED : அக் 27, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி தெருவில் நேற்று வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இலவச மனைப்பட்டா, சாலை வசதிகள், சமுதாயக்கூடம், பூங்காவிற்கு நடைப்பாதை மற்றும் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் கேட்டு பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
கூட்டத்தில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், சிறப்பு கூட்ட அலுவலர் கனகா, முன்னாள் கவுன்சிலர் ஹபிபுர் ரஹ்மான், அலி அப்பாஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

