ADDED : அக் 25, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்த கோவிலில் சூரசம்கார விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி பூஜைகளுடன் விழா துவங்கியது.
நேற்று சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கினர். வரும் 27ஆம் தேதி மாலை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது.
ஏற்பாடுகளை வெள்ளியம்பல சுவாமி மடத்தில் அறங்காவல் குழு தலைவர் ரத்தனசுப்பிரமணியர், பெருமத்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் பொன்னுசாமி முதலியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

