/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்
/
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்
ADDED : டிச 29, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில், கண்ணதாசன் இலக்கிய பேரவை 32 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
புவனகிரி தனியார் மண்டபத்தில் போட்டிகள் நடந்தது. பேரவை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் ஜெயபாலன், ஜெயராமன், தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்ளிட்ட குழுவினர் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
அரசு பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

