/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் விளையாட்டு விழா
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : ஏப் 21, 2025 06:10 AM
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு தின விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். இந்திய அஞ்சல்துறையில் பணியாற்றும் தேசிய விளையாட்டு வீரர், கபடி பயிற்சியாளர் மணிகண்டன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் வீரபாகு, விஷ்ணுபிரியா செய்திருந்தனர்.

