ADDED : மே 07, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : டாட்டா ஏஸ் மோதியதில் மொபட்டில் சென்ற எஸ்.எஸ்.ஐ., காயமடைந்தார்.
காட்டுமன்னார்கோயில், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்,54; இவர் தனது குடும்பத்துடன் வடலுார் ஜோதி நகரில் தங்கியுள்ளார். கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் அவர் தனது மனைவி கொளஞ்சியுடன் வடலுார்-விருத்தாச்சலம் சாலையில் மொபட்டில் சென்றார்.
சிறிது துாரம் சென்ற போது, பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம், மொபட் மீது மோதியது.
இதில், காயமடைந்த அவர்கள் கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.