/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் புனித டேவிட் கோட்டை புனரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு
/
கடலுாரில் புனித டேவிட் கோட்டை புனரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு
கடலுாரில் புனித டேவிட் கோட்டை புனரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு
கடலுாரில் புனித டேவிட் கோட்டை புனரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 06, 2025 03:23 AM

கடலுார்: தேவனாம்பட்டினம் புனித டேவிட் கோட்டையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடலுார் தேவனாம்பட்டினம் புனித டேவிட் கோட்டையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில், 'ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புனித டேவிட் கோட்டை கட்டபபட்டுள்ளது.
200 ஆண்டுகளை கடந்த பழமையான புராதான சின்னமாக விளங்குகிறது. இக்கட்டடம் தற்போது தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதால் புனரமைப்பதற்காக தேவாலயத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. பழைய கலெக்டர் அலுவலகம், டவுன்ஹால் புனரமைக்கப்பட்டு வருகிறது.
அரசின் அனுமதி கிடைத்ததும் பழமையான இக்கட்டடமானது அதன் தன்மை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வரலாற்று தொன்மையை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், சுற்றுலா தளமாகவும் உருவாக்குவதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புடன் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும்' என்றார்.
தொல்லியல் துறை செயற்பொறியாளர் தேவேந்திரன், ஆர்.டி.ஓ., சுந்தர்ராஜன், கவுன்சிலர் கிரேஸி, உதவி செயற்பொறியாளர் பிரவின்குமார், உதவி செயற்பொறியாளர் காவியநாதன், பேராயர் பீட்டர் பால்தாமஸ் உடனிருந்தனர்.