/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 08, 2025 03:04 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி வரவேற்றார். அமைச்சர் பன்னீர்செல்வம் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், 'பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் சாதாரண நோய்களில் உரிய சிகிச்சை இல்லாமல் மரணமடையும் நிலை இருந்தது.
தற்போது தமிழகத்தில் மருத்துவ உலகில் பெரிய புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.
தற்போதைய தலைமுறையினர் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கின்றனர்.
இதனால் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு நோய்வரும் முன்பே கண்டுபிடித்து உ ரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முகாமில் 1,524 பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளித்த னர்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மணிமேகலை, ஆத்மா திட்டக்குழு தலைவர் தங்க ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் தங்கதுரை நன்றி கூறினார்.