/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 08, 2025 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். தாசில்தார் இளஞ்சூரியன், ஆத்மா திட்டக்குழு தலைவர் தங்க ஆனந்தன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பேசினார்.
1வது வார்டு முதல், 7 வார்டு வரையிலான பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம், வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு விதை நெல், பேரூராட்சி சார்பில் இறப்பு மற்றும் பெயர் மாற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.
செயல் அலுவலர் ரஞ்சித் நன்றி கூறினார்.