/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 18, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் தலைமை தாங்கினார். தாசில்தார் அன்பழகன், தி.மு.க., நகர செயலாளர் பழனி மனோகரன், ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. 1 முதல் 8 வார்டு வரை உள்ள பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கருப்பையா, வி.ஏ.ஓ., அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.