/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 20, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
நகராட்சி சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பின், துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ அடையாள அட்டைகள் வழங்கினார். முகாமில், 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகளை வழங்கினர்.
ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கினர். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், தலைமை ஆசிரியர் தேவநாதன், வி.சி., கட்சி நகர செயலாளர் திருமாறன், கவுன்சிலர்கள் செல்வகுமார், பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.