/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 18, 2025 11:16 PM

நெய்வேலி; நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பேர்பெரியாங்குப்பம், நடுக்குப்பம், வல்லம் ஊராட்சிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் முத்தாண்டிக்குப்பத்தில் நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஓ., மீரா, பாபு, தாசில்தார் பிரகாஷ், டாக்டர்கள் அறிவொளி, விஜயராகவன், வட்ட வழங்கல் அதிகாரி ராஜலிங்கம், சிவக்குமார், பார்த்தசாரதி, மார்க்கண்டேயன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாயவேல், ஆசைத்தம்பி, ஜெயவேல், பேராசிரியர் ரங்கநாதன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், செந்தில்வேல் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சமுட்டிக்குப்பம் ஊராட்சியில் 9. 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய போர்வெல் அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தார்.
மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், முன்னாள் ஊராட்சி தலைவர் பூவராகமூர்த்தி, அன்பழகன், முருகவேல் உடனிருந்தனர்.