/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 27, 2025 02:41 AM
புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றியம், சாத்தப்பாடி சமுதாயக்கூடத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் குமரவேல் வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் லெனின், வருவாய் ஆய்வாளர் முருகன், துணை பி.டி.ஓ., ஹரிஹரசுதன், சுகாதார ஆய்வாளர் ரவிவர்மா முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் அன்பழகன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். முகாமில், சாத்தப்பாடி, சொக்கன்கொல்லை, மேலமணக்குடி ஊராட்சி மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாமை டாக்டர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அவைத் தலை வர் மாறன், நிர்வாகிகள் பாலமுருகன், ரவி, மேகநாதன், பாலசுப்ரமணியன், தங்கராசு, மதியழகன், ஜெகதீசன், கிளை செயலாளர்கள் ராமலிங்கம், பிரபு, ராஜேஷ், மணிகண்டன், அருண் பங்கேற்றனர்.
அகிலன் நன்றி கூறினார்.