/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
ADDED : அக் 24, 2025 03:16 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, தாசில்தார் உதயகுமார், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், மோசட்டை, கணபதி குறிச்சி, பெலாந்துறை, பாசிக்குளம் கிராம மக்களை சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
முகாமில், தேர்வு செய்யப்பட்ட மின் இணைப்பு, பட்டா மாற்றம் ஆகியவை குறித்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை மற்றும் தாய்மார்களுக்கு தொகுப்பு ஆகியவற்றை அமைச்சர் கணேசன் வழங்கினார்.

