தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்

 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்

 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்


ADDED : பிப் 11, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 03:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: கடலுார் மேற்கு மாவட்டம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர் அருகே உள்ள சங்கமம் கலை அறிவியல் கல்லூரியில் பொது நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

அங்கு அவர் பேசுகையில், ' காடாம்புலியூர் மட்டுமின்றி நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தொடர்ந்து இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்,' என்றார்.

இதில் இதய நோய் சிகிச்சை , நுரையீரல் பரிசோதனை, எலும்பு முறிவு உள்ளிட்ட 17 வகையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் ஆயிரக்கணக்கான மருத்துவ பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

டாக்டர்கள் அறிவொளி, விஜயராகவன், திருநாவுக்கரசு, அரவிந்த் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் , பி.டி.ஓ.,க்கள் பாபு, மீரா கோமதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், பண்ருட்டி ஒன்றிய அவைத் தலைவர் ராஜா மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் வீரராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வகுமார், சுமதி நந்தகோபால், ஞானசேகர், அருள்முருகன், சிவமுருகன், பொன்னம்பலம், அன்பழகன், பாபு, பாஸ்கர், தனசேகர், இளைஞர் அணி துணை செயலாளர்கள் வைரவன், ரகுபதி, லோகேஷ், மதன், சூர்யா, தஷ்ணாமூர்த்தி, ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us