ADDED : பிப் 11, 2026 03:45 AM

சிறுபாக்கம்: கடலுார் மேற்கு மாவட்ட பகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலுார் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர், ஒன்றியங்களில் நாளை (12ம் தேதி) காலை 10:30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பா.ஜ., அரசையும், அதன் ஆதரவு அ.தி.மு.க.,வையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலுார் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், வட்டார தலைவர்கள், நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, கிளை, வார்டு செயலர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
