/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கம்மாபுரம் ஒன்றியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
கம்மாபுரம் ஒன்றியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கம்மாபுரம் ஒன்றியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கம்மாபுரம் ஒன்றியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : ஜூலை 25, 2025 10:59 PM

விருத்தாசலம்; கம்மாபுரம் ஒன்றியம், மேலக்குப்பம் ஊராட்சியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பொது மக்களிடம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மனுக்கள் பெற்றார்.
தாசில்தார் அரவிந்தன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ஜெயக்குமாரி, மின்வாரிய உதவி செயற் பொறியாளர் புவனேஸ்வரி, துணை பி.டி.ஓ.,க்கள் மணிகண்டன், தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., ரவிச்சந்திரன் வரவேற்றார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
தொடர்ந்து, 15 துறைகள் சார்பில் மனுக்கள் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்ட அவர், கிராம மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆசைதம்பி, பொருளாளர் மகாலிங்கம், காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், இளைஞர் காங்., தொகுதி தலைவர் அன்புமணி, மாவட்ட பொதுச் செயலாளர் கோபிகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் அருண்பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.