/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 20, 2025 07:40 AM
விருத்தாசலம், : மங்கலம்பேட்டை சமுதாய நலக்கூடத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கினார். தாசில்தார் அரவிந்தன், துணை சேர்மன் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் செல்வம், மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் பாரி இப்ராஹிம், காங்., வட்டார தலைவர் ராவணன் பங்கேற்றனர்.
முகாமில், வருவாய், சுகாதாரம், மின்சாரம் உட்பட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் மனுக்கள் பெற்றனர்.