ADDED : செப் 15, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட12,13,14 உள்ளிட்ட வார்டுகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
புதுப்பேட்டை வடக்கு தெருவில் நடந்த முகாமை சிறப்பு விருந்தினர் நகராட்சி சேர்மன் செந்தில் குமார் துவக்கி வைத்தார்.
நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமார், நகராட்சி கமிஷனர் மல்லிகா முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் ரமேஷ், மணிகண்டன், ராஜா, லதா, ராஜன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், விஜயா ரமேஷ், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், வார்டு செயலாளர்கள் சுப்பிரமணியன், செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.