/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
/
பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ADDED : அக் 30, 2025 07:29 AM

மந்தாரக்குப்பம்: கெங்கை கொண்டான் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.
வேலன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, துணை சேர்மன் பெலிக்ஸ் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
முகாமில் கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள 9 முதல் 15 வார்டு வரை உள்ள பொதுமக்கள் முகாமில் கலைஞரின் உரிமை தொகை, இலவச மனை பட்டா, மின்சார இணைப்பு,ஆதார் திருத்தம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.முகாமில் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கினர்.
முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

