/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம்
ADDED : செப் 05, 2025 03:13 AM
குறிஞ்சிப்பாடி:குறிஞ்சிப்பாடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஜ்வான் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், தாசில்தார் விஜய் ஆனந்த், வட்டார மருத்துவ அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார், முகாமை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில், நகர செயலாளர் ஜெய்சங்கர் பேரூராட்சி தலைவர் கோகிலா குமார் துணைத் தலைவர் ராமர், துணை செயலாளர் விடுதலை சேகர, வீர குணசேகரன், மாவட்ட பிரதிநிதி குமார் ஒன்றிய பிரதிநிதிகள் வெற்றி, ராமு, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட, 9 மற்றும் 11 முதல், 18 வரையிலான வார்டு பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். முகாமில், 1,088 மனுக்கள் பெறப்பட்டன.