ADDED : நவ 02, 2024 07:04 AM
கடலுார்,: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடலுார் புதுவண்டிப்பாளையத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை விநாயகர் விழா மற்றும் மூஷிக வாகனத்தில் வீதியுலா மற்றும் புற்றுமண் வழிபாடு நடந்தது.
இன்று காலை கொடியேற்றம், மாலை சுவாமி வீதியுலா நடக்கிறது. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 6ம் தேதி மாலை, வீரபாகு சிறைமீட்டல், தாரகன் வதத்தை தொடர்ந்து சக்திவேல் பெறும் விழா நடக்கிறது.
வரும் 7ம் தேதி காலை வீரபாகுதேவருக்கு சிறப்பு அபிஷேகம், சஷ்டி மகாபிஷேகம், வீரபாகு துாது சிங்கமுகன் வதத்தை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடக்கிறது. வரும் 8ம் தேதி மாலை சுவாமி திருக்கல்யாணம், வெள்ளை யானை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும்,9ம் தேதி விடையாற்றி விழா, சுவாமி திருவீதியுலாவுடன் நிறைவுபெறுகிறது.