/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில வில்வித்தை போட்டி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
மாநில வில்வித்தை போட்டி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
மாநில வில்வித்தை போட்டி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
மாநில வில்வித்தை போட்டி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 14, 2025 04:13 AM

கடலுார்: கடலுார் அடுத்த சின்ன கங்கணாங்குப்பத்தில் மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., போட்டியை துவக்கி வைத்தார்.
போட்டியில் விழுப்புரம், பெரம்பலுார், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், நாகப்பட்டினம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், மாவட்ட வில்வித்தை அசோசியேஷன் தலைவர் விஜயகுமார், பொருளாளர் செந்தில்முருகன், துணைத் தலைவர் செந்தில், இணை செயலாளர் ஆறுமுகம், இளைஞரணி சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர். டைகர் இன்டர்நேஷனல் வில்வித்தை அகாடமி நிறுவனர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.