/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் ஸ்டேட் பாங்க் சிறப்பு முகாம்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் ஸ்டேட் பாங்க் சிறப்பு முகாம்
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் ஸ்டேட் பாங்க் சிறப்பு முகாம்
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் ஸ்டேட் பாங்க் சிறப்பு முகாம்
ADDED : செப் 28, 2024 06:58 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், ஸ்டேட் பாங்க் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். லோன் பிரிவு அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். கணினி துறைத் தலைவர் தமிழரசி வரவேற்றார்.
ஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் வைத்தீஸ்வரன் வங்கியின் பயன்பாடு, சிறப்புகள், கடனுதவி பெறும் முறைகள், வங்கி சார்ந்த தேவைகளை வாடிக்கையாளர்களை தேடிச் சென்று நிறைவேற்றுகிறோம் என்பது குறித்து பேசினார்.
மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு துவங்குவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் நன்றி கூறினார்.