/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு
/
அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு
ADDED : அக் 06, 2025 01:55 AM

கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் சுகமதி தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் பாலமுருகன் வரவேற்றார்.
பொதுச் செயலாளர் சுவாமிநாதன் அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் சரவணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், பொதுக்கோரிக்கைகள் மற்றும் துறைவாரியான கோரிக்கை களின் நிலை, அறிக்கைகளின் மீதான விவாதமும், ஏற்பும், உழைக்கும் மக்கள் சந்தி த்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்புத் தலைவர் பாலசுப்ர மணியன் பேசி னார்.
கூட்டத்தில் இணை பொதுச் செயலாளர்கள் சிவக்குமார், ஜெயசந்திரராஜா, மாநில துணைத்தலைவர்கள் விஸ்வநாதன், உ மாசங்கர், ராஜன், சேகர், மரகதலிங்கம், ஞானஜோதி, மாநில அமைப்புச்செயலாளர் பாஸ்கரன், பிரசார செயலாளர் ஆறுமுகம், தலைமை நிலைய செயலாளர் கனிமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமாரி நன்றி கூறினார்.