/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தவ அமுதம் பள்ளியில் மாநில கராத்தே போட்டி
/
தவ அமுதம் பள்ளியில் மாநில கராத்தே போட்டி
ADDED : பிப் 21, 2024 10:50 PM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் புனிதவள்ளி தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன் முன்னிலை வகித்தார். பெராக் ஒக்கினவோ கோஜிரியோ கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் ரங்கநாதன் வரவேற்றார். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., பள்ளி தாளாளர் செங்கோல், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் ஆகியோர, கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கினர். இதில் கடலூர், புதுச்சேரி, அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கராத்தே மாஸ்டர்கள் குமரகுரு, சத்யராஜ், ஷர்மா, இளவரசன், ரவிக்குமார்,பிரீத்தி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஷர்மா நன்றி கூறினார்.