ADDED : நவ 12, 2026 04:50 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு டவுன் பஸ் திடீரென பழுதாகி நின்றது.
கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து தேவனாம்பட்டிணத்திற்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று (நவ.,12) காலை வழக்கம் போல் பஸ் நிலையத்தில் இருந்து தேவனாம்பட்டிணத்திற்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
பழைய கலெக்டர் அலுவலக சாலையில் த.மா.கா., அலுவலகம் அருகில் வந்த போது, பஸ் திடீரென பழுதாகி நின்றது. டிரைவர் பல முறை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் சிறிது துாரம் பஸ்சை தள்ளி சென்றதும், 10 நிமிட தாமதத்திற்கு பின் பஸ் ஸ்டார்ட் ஆகி புறப்பட்டு சென்றது.
