/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு; திருத்துறைப்பூண்டி மாணவர் முதலிடம்
/
மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு; திருத்துறைப்பூண்டி மாணவர் முதலிடம்
மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு; திருத்துறைப்பூண்டி மாணவர் முதலிடம்
மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு; திருத்துறைப்பூண்டி மாணவர் முதலிடம்
ADDED : ஜன 09, 2024 07:29 AM

கடலுார் : கடலுாரில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் திருத்துறைப்பூண்டி பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, கடலுார் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 6ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது.
இதில், 38 மாவட்டங்களை சேர்ந்த 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 456 மாணவ, மாணவிகள் அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஆசிரியர்களும் அறிவியல் படைப்புகளை காட்சிப் படுத்தினர்.
கண்காட்சி நிறைவு விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், முதலிடம் பிடித்த திருத்துறைப்பூண்டி ஜான்டூயி பள்ளி மாணவர் விக்னேஸ்வரன், 2ம் இடம் பிடித்த கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் ராமன், 3ம் இடம் பிடித்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அபினாஷ் ஆகியோருக்கு பரிசு வழங்கினார்.
இவர்கள் வரும் 27ம் தேதி, தென்னிந்திய அளவில் விஜயவாடாவில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றனர். முதல் 3 இடங்களை பிடித்த பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், விஜயவாடா விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் அருங்காட்சியகம் மாரி லெனின், நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் சசிகலா, கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி முதல்வர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.