/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில எறிபந்து போட்டி வீரர், வீராங்கனைகள் தேர்வு
/
மாநில எறிபந்து போட்டி வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : அக் 19, 2025 11:57 PM
விருத்தாசலம்: திருநெல்வேலியில் நடக்கும் மாநில எறிபந்து போட்டிக்கு, விருத்தாசலம் அரசு பள்ளியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது.
மாவட்ட எறிபந்து சங்க மாவட்ட செயலாளர் ராஜராஜசோழன் அறிக் கை:
தமிழ்நாடு மாநில எறிபந்து கழகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட எறிபந்து கழகம் இணைந்து 23வது மாநில அளவிலான சீனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது.
மாநிலம் முழுதுமிருந்தும் 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இப்போட்டியில் பங்கேற்க மாவட்ட அளவிலான வீரர், வீராங்கனைகள் தேர்வு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், வரும் 21ம் தேதி நடக்கிறது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அன்று காலை 8:00 மணிக்கு, நேரில் ஆஜராகி வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.