/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி.ஈடன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
எஸ்.டி.ஈடன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 09, 2025 03:31 AM

சேத்தியாத்தோப்பு: வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வை எழுதிய 289 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 19 பேர் 570 மதிப்பெண்களுக்கு மேல், 57 பேர் 550 மதிப்பெண்களுக்கு மேல், 172 பேர் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.
கணிணி பாடத்தில் 18 பேர் 100க்கு 100 மதிப்பெண், தமிழ் பாடத்தில் 18 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். 595 மதிப்பெண் பெற்றும் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ஷபானாபானு, 591 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடம் பிடித்த மாணவி பிரியா, 588 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடம் பிடித்த மாணவர் பிரகாஷ் ஆகியோரை பள்ளி முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.